உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டெஸ்ட் படத்திலிருந்து நயன்தாரா பர்ஸ்ட் லுக் வெளியானது

டெஸ்ட் படத்திலிருந்து நயன்தாரா பர்ஸ்ட் லுக் வெளியானது

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் அவ்வபோது நடிக்கிறார். தயாரிப்பாளர் ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் தயாரித்து முதல் முறையாக இயக்கி வரும் திரைப்படம் 'தி டெஸ்ட்'. இதில் நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். சக்திஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதை தொடர்ந்து இன்று நடிகை நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டெஸ்ட் படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !