உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாதவன் - கங்கனா படத்தின் படப்பிடிப்பில் ரஜினி

மாதவன் - கங்கனா படத்தின் படப்பிடிப்பில் ரஜினி

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். தமிழில் 2008ம் ஆண்டு தாம்தூம் என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவி படத்தில் நடித்தார் கங்கனா. பின்னர் சந்திரமுகி -2 படத்திலும் நடித்தார்.

இந்த நிலையில் தற்போது மாதவனை நாயகனாக வைத்து ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்திலும் இணைந்துள்ளார் கங்கனா. தலைவி படத்திற்கு பின் மீண்டும் விஜய் இயக்கத்தில் கங்கனா நடிக்கிறார். அதோடு 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மாதவன் உடன் நடிக்கிறார். சைக்காலஜி கலந்த திரில்லர் படமாக உருவாகிறது. ஜி.வி .பிரகாஷ் இசையமைக்கிறார்.

சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென விசிட் கொடுத்துள்ளார். அந்த போட்டோக்களை பகிர்ந்து, ‛‛என்ன ஒரு அற்புதமான தருணம். எங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸாக வந்து ஆச்சர்யப்படுத்தினார் ரஜினி'' என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார் கங்கனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !