'கில்லர் கில்லர்' - கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடல் அறிவிப்பு
ADDED : 694 days ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன், அதிதி பாலன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் 2024 பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கடந்த சில மாதமாக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்போது பர்ஸ்ட் சிங்கள் தனுஷ் குரலில் 'கில்லர் கில்லர்' என்கிற பாடலை வருகின்ற நவம்பர் 22ந் தேதி புதன்கிழமை அன்று வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.