நாகசைதன்யா நடிக்கும் தண்டல்
ADDED : 714 days ago
கார்த்திகேயா பட இயக்குனர் சண்டூ மொண்டேட்டி இயக்கத்தில் நாகசைதன்யா தனது 23வது படத்தில் நடிக்கிறார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தற்போது இப்படத்திற்கு 'தண்டல்' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இதில் நாக சைதன்யா மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதற்காக தனது உடம்பைக் கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார். நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.