உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் குரலில் வெளிவந்த ‛கில்லர் கில்லர்' பாடல்

தனுஷ் குரலில் வெளிவந்த ‛கில்லர் கில்லர்' பாடல்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் 2024 பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்திலிருந்து 'கில்லர் கில்லர்' என்கிற முதல் பாடல் வருகின்ற நவம்பர் 22ந் தேதி இன்று வெளியாகும் என அறிவித்ததைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் தனுஷ் குரலில் இப்பாடல் தமிழில் வெளியானது. ராப் பாடலாக வெளியாகி உள்ள இதில் தனுஷ் தனது குரலை வித்தியாசமாக பயன்படுத்தி பாடியுள்ளார். தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்பாடல் வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !