தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் சூர்யாவின் அயன்!
ADDED : 682 days ago
ரஜினி, கமல் நடித்த முந்தைய சூப்பர் ஹிட் படங்கள் மீண்டும் திரைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், சூர்யா நடித்த அயன் படம் தெலுங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த வாரணம் ஆயிரம் படம் சமீபத்தில் தெலுங்கில் ரீ-ரிலீஸ் வெளியிடப்பட்டது. 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான இந்த படம் அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பல தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவும் ஓடியது. அதன் காரணமாகவே கே.வி .ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - தமன்னா நடித்த அயன் படத்தையும் தெலுங்கில் ரீ-ரிலீஸ் செய்ய அப்படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அயன் படத்தின் தெலுங்கு போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.