மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஜெயராம் நடிக்கும் ‛ட்ரெயின்'
ADDED : 682 days ago
ஷாரூக்கானுடன் நடித்த ஜவான் படம் வெளியாகி வெற்றி பெற்றதை அடுத்து விஜய் சேதுபதி நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. தற்போது விடுதலை பார்ட் 2, மகாராஜா போன்ற படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி, விரைவில் மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார். எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை நவம்பர் இறுதியில் நடைபெற உள்ளது. மேலும் விஜய் சேதுபதியின் 51 வது படமான இப்படம் முழுக்க முழுக்க ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு திரில்லர் சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் உருவாகிறது. அதனால் இந்த படத்திற்கு ட்ரெயின் என்று டைட்டில் வைத்திருக்கிறார் மிஷ்கின். அதோடு பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இந்த படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கிறார். அவர் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.