மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
651 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
651 days ago
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் இந்திரன்ஸ். தமிழில் ஆடும் கூத்து, நண்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்றுள்ளார். 67 வயது வயதான இந்திரன்ஸ் கேரள மாநில எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பில் இணைந்துள்ளார். மேலும் அரசின் எழுத்தறிவு திட்ட விளம்பர தூதுவராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். 10ம் வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் இந்திரன்ஸ் வழங்கினார்.
இதுகுறித்து இந்திரன்ஸ் கூறும்போது, “8ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. இது குறித்து அடிக்கடி வருத்தப்பட்டு இருக்கிறேன். படிப்பை பாதியில் விட்டபோது கல்வியின் மகத்துவம் எனக்கு தெரியவில்லை. அதன்பிறகு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். படித்து இருந்தால் நம்பிக்கை, தைரியம் கொண்டவனாக இருந்து இருப்பேன்'' என்றார்.
651 days ago
651 days ago