டில்லி தெருக்களில் வலம் வந்த அனிமல் படக்குழு
ADDED : 726 days ago
ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் நடித்துள்ள பாலிவுட் படம் 'அனிமல்'. சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கி உள்ளார். டிசம்பர் 1ம் தேதி படம் வெளியாகிறது. இதன் பாடல் வெளியீட்டு விழாவை படக்குழுவினர் வித்தியாசமாக டில்லி தெருக்களில் வெளியிட்டுள்ளனர்.
டில்லி தெருக்களில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்ட படக்குழுவினர் வலம் வந்தனர். ரன்பீரும், பாபியும் ரசிகர்களுடன் உரையாடினர். பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் பாடல்கள் வெளியிடப்பட்டது. புதுமையான பாடல் வெளியீட்டு விழா டில்லியை பரபரப்புக்குள்ளாக்கியது.