ஏ.எல்.விஜய்யின் புதிய வீட்டு கிரகப்பிரவேசத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட ஆர்யா!
ADDED : 693 days ago
தலைவி படத்தை அடுத்து அருண் விஜய் - எமி ஜாக்சன் நடிப்பில் மிஷன் சாப்டர்-1 அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கியுள்ளார் ஏ.எல். விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் ஒரு புதிய வீடு கட்டி உள்ளார் ஏ.எல்.விஜய். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் ஆர்யா தனது மனைவியான சாயிஷா மற்றும் மாமியாருடன் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வருகிறது. மேலும், விஜய் இயக்கத்தில் மதராசபட்டினம் படத்தில் ஆர்யாவும், வனமகன் படத்தில் சாய்ஷாவும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.