காந்தாரா 2 வெறித்தனமான அறிமுக டீசர் வெளியீடு
ADDED : 689 days ago
கர்நாடகாவில் உள்ள மலைவாழ் மக்களின் வட்டார தெய்வத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கன்னட திரைப்படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் அதிக வரவேற்பை பெற்றது. தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
காந்தாராவின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக ரிஷப் ஷெட்டி அறிவித்திருந்தார். படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் இன்று இப்படத்தின் அறிமுக டீசர் உடன் கூடிய முதல் பார்வை வெளியாகி உள்ளது. அதில் மலைவாழ் மக்களின் தெய்வமாக ரிஷப் ஷெட்டியே ஆக்ரோஷமாக உருவெடுத்து இருப்பதை பார்க்க முடிகிறது.
இத்திரைப்படம் உலக அளவில் 7 மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.