பிசியான அம்மு அபிராமி : 8 படங்களில் நடிக்கிறார்
பைரவா படத்தில் அறிமுகமான அம்மு அபிராமி, என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் விடலை பெண்ணாக நடித்தார். அசுரன் படத்தில் பிளாஷ்பேக் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார்.
இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட அம்முவின் கையில் தற்போது 7 படங்களும், ஒரு வெப் தொடரும் உள்ளது. கண்ணகி, நிறங்கள் மூன்று, யார் இவர்கள், கனவு மெய்ப்பட, குதூகலம், பெண்டுலம் உள்பட 7 படங்களில் நடித்து வருகிறார். கோலி சோடா 1.5 என்ற வெப் தொடரிலும் நடிக்கிறார். இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'ஜிகிரி தோஸ்த்' படம் டிசம்பரில் வெளியாகிறது. இந்த படத்தில் அவர் ஷாரிக் ஹாசன் ஜோடியாக நடிக்கிறார்.
ஷங்கரின் உதவி இயக்குனர் அறன் இயக்குகிறார். கே.பிரதீப் உடன் சேர்ந்து இப்படத்தை தயாரிப்பதுடன் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் அறன். வி.ஜே.ஆஷிக், பவித்ர லக்ஷ்மி, அனுபமா குமார், கவுதம் சுந்தரராஜன், சிவம், ஜாங்கிரி மதுமிதாஉள்பட பலர் நடித்துள்ளனர். அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார்.