டிச., 1ல் விஷால் 34வது பட பர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியாகிறது
ADDED : 678 days ago
ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் நடித்த விஷால், தற்போது தனது 34 வது படத்திலும் அவரது இயக்கத்தில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வரும் டிச., 1ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு போஸ்டரில் டாக்டரின் ஸ்டெதஸ்கோப் மற்றும் துப்பாக்கி ஆகிய இரண்டும் இடம்பெற்றுள்ளன. இதை வைத்து பார்க்கும் போது, இதில் டாக்டர் வேடத்தில் நடிக்கும் விஷால், ஏதோ பிரச்சனையால் துப்பாக்கியை கையில் எடுக்கிறார் என்று யூகிக்க முடிகிறது.