உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ்!

ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ்!

ஜெய் பீம் பட இயக்குனர் தா.சே. ஞானவேல் அடுத்து நடிகர் ரஜினிகாந்த்-ன் 170வது படத்தை இயக்கி வருகிறார் . இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

ஏற்கனவே இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. கடந்த சில வாரங்களாக இதன் படப்பிடிப்பு சென்னையில் கோகுலம் ஸ்டுடியோவில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ரஜினிகாந்த் பிறந்தநாள் வருகின்ற டிசம்பர் 12ம் தேதி வருவதைத் முன்னிட்டு ரஜினி 170வது படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !