மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
638 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
638 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
638 days ago
மலையாளத்தில் தொண்ணூறுகளில் ஹீரோவாகவும் தற்போது குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் முகேஷ். கேரளாவின் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். தமிழில் ஜாதிமல்லி, ஐந்தாம்படை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் சரிதாவின் கணவர் என்கிற வகையில் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ஓரளவு பிரபலமானவர். கடந்த 1988ல் சரிதாவை திருமணம் செய்துகொண்ட முகேஷ் 2011ல் அவரை விவாகரத்து செய்தார். அதன்பின் 2013ல் மெத்தில் தேவிகா என்கிற நாடக நடிகையை மறுமணம் செய்துகொண்டார்.
ஆனால் 8 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு முகேஷிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக மெத்தில் தேவிகா நீதிமன்றத்தில் விண்ணப்பித்தது மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. தற்போது மெத்தில் தேவிகாவும் முகேஷிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் முகேஷ் நடிப்பில் வெளியான பிலிப்ஸ் என்கிற திரைப்படம் ஓரளவுக்கு வெற்றி படமாக அமைந்துள்ளது. இதை தொடர்ந்து மீடியாக்களில் படம் குறித்த அனுபவங்களை பேட்டி கொடுத்து வருகிறார் முகேஷ்.
அப்போது தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து அவர் கூறும்போது, “நான் ஒருபோதும் சரிதா பற்றியோ அல்லது தேவிகா பற்றியோ எந்த இடத்திலும் குறை சொல்லியோ, விமர்சித்தோ பேசியது இல்லை. விவாகரத்து என்பதும் வாழ்க்கையின் ஒரு பகுதி தான் என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். என்னைப்போலவே அவர்களுக்கும் மனது இருக்கிறது.. அதனால் தான் அவர்கள் எடுத்த அந்த முடிவுக்கு என்னால் எளிதாக உடன்பட முடிந்தது. என்னுடைய குழந்தைகளிடம் கூட எப்போதும் உங்களது அம்மாக்களை காயப்படுத்தும்படி பேசிவிட வேண்டாம் என்று தான் அறிவுறுத்தியுள்ளேன்” என்று கூறியுள்ளார் நடிகர் முகேஷ்.
638 days ago
638 days ago
638 days ago