உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பைட்டர் டீசரில் பிகினி, லிப்லாக்கில் தீபிகா படுகோனே

பைட்டர் டீசரில் பிகினி, லிப்லாக்கில் தீபிகா படுகோனே

ஷாரூக்கான் - தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான பதான் என்ற படத்தை இயக்கியவர் சித்தார்த் ஆனந்த். இவர் தற்போது ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனே நடிப்பில் பைட்டர் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இவர்களுடன் அனில் கபூரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த பைட்டர் படம் ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஷாரூக்கானுடன் நடித்த பதான் படத்தில், காவி கலரில் பிகினி உடையணிந்து நடித்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட தீபிகா படுகோனே, இந்த பைட்டர் படத்திலும் ஹிருத்திக் ரோஷன் உடன் லிப்லாக் மற்றும் பிகினி காட்சியில் நடித்துள்ளார். குறிப்பாக கடற்கரையில் கிருத்திக் ரோஷன் உடன் பிகினியில் தீபிகா படுகோனே தோன்றும் காட்சி படுகவர்ச்சியாக இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !