அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்
ADDED : 867 days ago
பாலிவுட் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் என்ற படத்தில் அதிரடியான வில்லனாக நடித்திருந்தார். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இந்த நிலையில் இதுவரை பாலிவுட்டில் மட்டுமே படங்கள் இயக்கி வந்த அனுராக் காஷ்யப், விரைவில் தமிழில் ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கி, வில்லனாகவும் நடிக்கப் போகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.