உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ்

இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ்

நடிகர் பப்லு பிரித்விராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இது அல்லாமல் டி.வி. தொகுப்பாளராகவும் மற்றும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் ஹிந்தியில் வெளிவந்த 'அனிமல்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் 51வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பப்லு பிரித்விராஜ் நடித்துள்ளார். இதையடுத்து மிஷ்கின், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் 'ட்ரெயின்' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து இரண்டு விஜய் சேதுபதி படங்களில் பப்லு பிரித்விராஜ் நடிக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !