இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது
ADDED : 820 days ago
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தனது அக்கா மகனை கதாநாயகனாக வைத்து தனுஷ் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார் என கூறப்படுகிறது. ஏற்கனவே இதன் பூஜை நிகழ்ச்சி, போட்டோ ஷூட் ஆகியவை சிலநாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று(டிச., 11) சென்னையில் துவங்கி உள்ளது. மேலும், இதில் முக்கிய தோற்றத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.