உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அயலான்' படத்திற்கு சூடுபிடித்த வியாபாரம்

'அயலான்' படத்திற்கு சூடுபிடித்த வியாபாரம்

தமிழ் சினிமாவில் சில சமயங்களில் சில ஆச்சரியங்கள் நடக்கும். அப்படி ஒரு ஆச்சரியம் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' படத்திற்கு நடந்துள்ளது என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இப்படம் கடந்த ஐந்து வருடங்களாக உருவாகி வருகிறது. இவ்வளவு நீண்ட காலம் தயாராகும் படங்களுக்கு குறிப்பிடும் அளவு வியாபாரம் நடக்காது. அப்படி ஒரு சென்டிமென்ட் தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால், அந்த சென்டிமென்ட்டை 'அயலான்' முறியடித்திருக்கிறது.

இப்படத்தின் தமிழக வினியோக உரிமை படம் வெளியாவதற்கு ஒரு மாதம் முனனதாகவே முடிந்துவிட்டது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஏஆர் ரஹ்மான் இசை, புதிய கதைக்களம், விஎப்எக்ஸ் காட்சிகள் என இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதே இதற்குக் காரணம் என்கிறார்கள். இத்தனை வருட போராட்டத்திற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியில் உள்ளதாம்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள மற்ற படங்களுக்கு முன்பாகவே இப்படத்தின் வியாபாரம் முழுமையாக முடிந்துள்ளது. சிவகார்த்திகேயன் மீது தனிப்பட்ட சர்ச்சையை சிலர் கிளப்பியுள்ள நிலையில் அது அவருடைய திரையுலக வாழ்க்கையை பாதிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !