உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 10 நாட்களில் ரூ.717 கோடி வசூல் சாதனை ஈட்டிய ‛அனிமல்'

10 நாட்களில் ரூ.717 கோடி வசூல் சாதனை ஈட்டிய ‛அனிமல்'

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'அனிமல்'. இப்படம் பலரால் பலவிதமாக விமர்சிக்கப்பட்டாலும் வசூலில் எந்த குறையும் ஏற்படவில்லை. இந்த படம் வெளிவந்த 10 நாட்களில் உலகளவில் ரூ. 717.46 கோடி வரை வசூலித்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், இரண்டாவது வாரத்தில் ஹிந்தியில் அதிகளவில் வசூலித்த படமாக அனிமல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ரன்பீர் கபூருக்கு முதன்முறையாக ரூ.500 கோடி வசூலை ஈட்டிய படமாக ‛அனிமல்' அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !