முதல்முறையாக கணவன், மனைவியாக நடிக்கும் அஜித் - த்ரிஷா
ADDED : 712 days ago
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வரும் படம் 'விடாமுயற்சி'. இதன் படப்பிடிப்பு இரண்டாம் கட்டமாக தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு விடாமுயற்சி படத்தில் அஜித், த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதில் கணவன், மனைவி கதாபாத்திரத்தில் இருவரும் முதன்முறையாக நடிக்கின்றனர். ஏற்கனவே ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் அஜித், த்ரிஷா இணைந்து நடித்தனர். அவற்றில் எல்லாம் காதலர்களாக நடித்தனர்.