ராமாயணம் ஹிந்தி படத்தில் சீதையாக சாய் பல்லவி!
ADDED : 668 days ago
சமீபத்தில் ஹிந்தியில் வெளியான படம் அனிமல். ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் இணைந்து நடித்தனர். அதை அடுத்து ராமாயணத்தை மையமாகக் கொண்டு ஹிந்தியில் தயாராகும் ஒரு பிரமாண்ட படத்தில் ரன்வீர் கபூர் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ராமர் வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்க, ராவணன் வேடத்தில் யஷ் நடிக்க, சீதை வேடத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். நிதிஷ் திவாரி இப்படத்தை இயக்க உள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த ராமாயணம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், 2025ம் ஆண்டு திரைக்கு வரவுள்ளது. இதற்கு முன்பு ராமாயண கதையை தழுவி பல படங்கள் வெளியான போதும், இந்த படம் நவீன தொழில்நுட்பத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக இருக்கிறது.