'அயலான்' படக்குழுவை ஆச்சரியப்படுத்திய சித்தார்த்
ADDED : 659 days ago
ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் 'அயலான்'.
வேற்றுகிரகத்திலிருந்து ஒரு உயிரினம் பூமிக்கு வந்து என்ன செய்கிறது என்பதுதான் இப்படத்தின் ஒரு வரிக் கதை. அதனால்தான் படத்தின் பெயர் 'அயலான்' என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படத்தில் அந்த வேற்றுக் கிரக உயிரினத்திற்கு நடிகர் சித்தார்த் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.
மூன்றே நாட்களில் தனது டப்பிங்கை முடித்துள்ளார் சித்தார்த். அவருடைய குரல் அயலான் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது என படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளார்களாம்.
இதற்காக அவர் எந்தவிதமான சம்பளத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது கூடுதல் தகவல். சித்தார்த்தின் இந்த செயல் படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.