உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மும்பையில் குடியேறியது ஏன்? - ஜோதிகா விளக்கம்

மும்பையில் குடியேறியது ஏன்? - ஜோதிகா விளக்கம்

சென்னை தி நகரின் மைய பகுதியில் அரண்மணை போன்று வீடிருந்தும் மும்பையில் குடியேறி இருக்கிறார் ஜோதிகா. அவரது மகன் மகளும் தற்போது மும்பையில் படிப்பை தொடர்கிறார்கள். ஜோதிகா கணவர் சூர்யா, மும்பைக்கும், சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார். சூர்யாவின் பாலிவுட் பட பணிகளுக்காத்தான் அவர் குடும்பம் மும்பையில் குடியேறியது என்று முதலில் சொல்லப்பட்டது. அதன்பின் குடும்ப பிரச்னையால் ஜோதிகா மும்பை சென்றதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து ஜோதிகா கூறியிருப்பதாவது: கொரோனா காலத்தில் என் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது விமான சேவை இல்லாததால் என்னால் அங்கு செல்ல கூட முடியவில்லை. அந்த சமயத்தில் யோசித்தேன். 25 வயதிலிருந்து நான் சென்னையில்தான் இருக்கிறேன். என் பெற்றோருடன் நான் இருந்த காலங்கள் குறைவு.

திருமணத்துக்குப் பின் பெண்கள் தங்கள் பெற்றோர்களை கவனித்துக்கொள்ள முடிவதில்லை. திருமணத்துக்குப்பின் பொறுப்புகள் கூடிவிடுவதால் அதனை விட்டு பெற்றோர்களுடன் நேரம் செலவழிப்பது குறைந்துவிடுகிறது. அதனால்தான் சிறிது நாள் அவர்களுடன் இருக்க வேண்டும் என்பதால் மும்பைக்கு மாறினேன். இது ஒரு தற்காலிக முடிவுதான்.

குழந்தைகளுக்கும் பள்ளி செல்ல வசதியாக உள்ளது. சூர்யா எப்போதும் எனக்கு துணையாக இருப்பார். நான் சந்தோஷமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு சரியாக இருக்க வேண்டும் என நினைத்தார். இப்படித்தான் இருக்க வேண்டும் என எப்போதும் வற்புறுத்த மாட்டார். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !