மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
625 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
625 days ago
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையில், பிரதீப் ரங்கநாதன், கிர்த்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்க உள்ள படம் 'லவ் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன்', சுருக்கமாக 'எல்ஐசி'.
இந்தப் படத்திற்கான வொர்க் ஷாப்பில் கலந்து கொண்டு நடித்தது பற்றி மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் பதிவிட்டுள்ளார் எஸ்ஜே சூர்யா.
“எல்ஐசி - லவ் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன்' என டைட்டில் எப்படி உற்சாகமாக உள்ளதோ அது போல படமும் உற்சாகமாக இருக்கும். நேற்று இப்படத்திற்காக மதியம் 3 மணி முதல் விடிகாலை 3 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் வொர்க் ஷாப்பில் கலந்து கொண்டேன். இயக்குனர் விக்னேஷ் சிவன் சார், பிரதீப் ரங்கநாதன் சார், நான் ஆகியோருக்கிடையே அற்புதமான ஒரு கூட்டம். இந்த புதிய காதல் உலகுக்காக, பொழுதுபோக்காக, அன்பாக, உற்சாகமாக இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை இயக்குனர் விக்னேஷ் சிவன் உன்னிப்பாகவும், சிறப்பாகவும் செய்கிறார். முன் தயாரிப்புப் பணிகள் முழுமூச்சில் நடந்து வருகிறது, விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்திற்கான தலைப்பு 'எல்ஐசி' சர்ச்சையில் இருந்து வரும் நிலையில் அது பற்றி படக்குழுவினர் எதுவும் சொல்லாமல் தங்களது வேலைகளைப் பார்த்து வருகிறார்கள்.
625 days ago
625 days ago