சீரியலில் கம்பேக் கொடுக்கிறார் சுகன்யா
ADDED : 654 days ago
தமிழ் திரையுலகில் 80-கள் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர், கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தில் பிரிந்தார். சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதற்கிடையில் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் தொடரில் நடித்து சின்னத்திரை நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு பெரிய அளவில் சீரியல்களில் தோன்றாத அவர் தற்போது மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்க உள்ளார். இதனால் ரசிகர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மிகவிரைவில் சுகன்யா எந்த சேனலில் எந்த தொடரில் நடிக்கிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.