துபாயில் அயலான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!
ADDED : 737 days ago
கடந்த 2018ல் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகார் ஆகியோர் நடிப்பில் தொடங்கிய படம் 'அயலான்'. கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 26ம் தேதி சென்னையில் நடைபெறுவதை தொடர்ந்து, இதன் டிரைலர் வெளியிட்டு விழாவை 2024 ஜனவரி 7ம் தேதி துபாயில் பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.