கைவசம் தொழில் இருக்கு : ஆட்டோ ஓட்டி அசத்திய கனிகா
ADDED : 649 days ago
தமிழில் பைவ்ஸ்டார், ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கனிகா. மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தமிழில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஈஸ்வரி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்தாலும் நிஜத்தில் மாடர்னாக வலம் வரும் கனிகா அண்மையில் குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு வாடகைக்கு எடுத்துள்ள ஆட்டோவை ஓட்டி ஜாலியாக வைப் செய்து எஞ்சாய் செய்துள்ளார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர் 'கைவசம் ஒரு தொழில் இருக்கு!' என காமெடியாக பதிவிட தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.