ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்கும் பிரசன்னா
ADDED : 656 days ago
தமிழ் நடிகர்களில் ஏற்கெனவே விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் ஹிந்தி வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து நடிக்கிறார் பிரசன்னா. தமிழில் ஏற்கெனவே சில வெப் சீரிஸ்களில் நடித்துள்ள அவர் ஹிந்தியில் தயாராகும் 'அபஹரன்' என்ற வெப் சீரிஸில் நடிக்கிறார். ராணுவ பின்னணியில் உருவாகும் இந்த தொடரில் பிரசன்னா விமான படை கேப்டனாக நடிக்கிறார்.
இந்த வெப்சீரிஸை சந்தோஷ் சிங் இயக்குகிறார். அபஹரன் வெப்சீரிஸின் முதல் இரண்டு சீசன்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் இது மூன்றாவது சீசனாகும். இதற்கு தமிழ் படமான 'சைக்கோ'விற்கு ஒளிப்பதிவு செய்த தன்வீர் ஒளிப்பதிவு செய்கிறார். மும்பை, கான்பூர், சார்ஜா உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.