சல்மான் கான் புதிய படத்தின் தலைப்பு குறித்து தகவல் இதோ
ADDED : 703 days ago
தமிழில் பட்டியல், பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் அடுத்து பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இதனை கரண் ஜோகர் தனது தர்மா புரொடக்சன்ஸ் மூலம் தயாரிக்கின்றார். இதில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கின்றார். அடுத்த வருடம் (2024) கிறிஸ்துமஸ் அன்று இப்படம் வெளியாகிறது என தகவல்கள் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் இப்படத்திற்கு 'தி பூல்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் இந்த படத்தை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.