மலையாளத்தில் ரீமேக்காகும் இலக்கியா! யார் ஹீரோயின் தெரியுமா?
ADDED : 646 days ago
தமிழில் டிவி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர்களில் இலக்கியா தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில், ஹீமா பிந்து, நந்தன் லோகநாதன், சுஷ்மா நாயர், அரவிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதுநாள் வரையில் தமிழில் ஒளிபரப்பான இந்த தொடர் இனி மலையாளத்தில் அதிகாரப்பூர்வமாக ரீமேக்காக உள்ளது. மலையாளத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ரீகோபிகா நாயர் கமிட்டாகியுள்ளார். ஸ்ரீகோபிகா நாயர் தமிழில் சுந்தரி மற்றும் அன்பே வா தொடர்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.