தேவாரா படத்தின் க்ளிம்ஸ் ஜன. 8ல் வெளியாகிறது
ADDED : 646 days ago
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் கொரட்டலா சிவா இயக்கத்தில் தற்போது 'தேவாரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜான்வி கபூர் , சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சாக்கோ, ஸ்ரீகாந்த், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என். டி. ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகிறது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் க்ளிம்ஸ் வீடியோ ஜனவரி 8, 2024 அன்று வெளியாகும் என புதிய வருடப்பிறப்பு முன்னிட்டு படக்குழுவினர்கள் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.