சூப்பர் குட் பிலிம்ஸிற்காக மீண்டும் இணைந்த பஹத் பாசில், வடிவேலு!
ADDED : 646 days ago
2023ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'மாமன்னன்'. இதில் உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், வடிவேலு ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் வெளிவந்த பிறகு பஹத் பாசில், வடிவேலு இருவரின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது .
இந்த நிலையில் மீண்டும் பஹத் பாசில், வடிவேலு இருவரும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை புதுமுக இயக்குனர் வி. கிருஷ்ண மூர்த்தி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது படமாக உருவாகிறது . இன்று புது வருடபிறப்பை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.