‛கயல்' ஆனந்தியின் மங்கை
ADDED : 646 days ago
கயல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஆனந்தி. தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நடிக்கும் இவர் இப்போது ‛மங்கை' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். குபேந்திரன் காமாட்சி என்பவர் இயக்குகிறார். இதன் முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் பெண்ணின் உடல் பாகங்களை போட்டோ எடுப்பது போன்று வெளியிட்டுள்ளனர். வித்தியாசமாக வெளியிடப்பட்ட இந்த போஸ்டர் கவனம் பெற்றுள்ளது. அதோடு இந்த படத்தின் கதை பெண்கள் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்னைகளை எடுத்துக் கூறும் படமாக இருக்கலாம் என தெரிகிறது.