உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வேட்டையன் படத்தை இந்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால் தற்போது வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட அதிக நாட்கள் எடுத்துக் கொண்டு வருவதோடு, படப்பிடிப்பு முடிவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. அதனால் படத்தின் ரிலீசை கோடை விடுமுறையில் இருந்து தீபாவளிக்கு மாற்றி வைக்க திட்டமிட்டுள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !