பாலியல் சீண்டல் குறித்து யாஷிகா ஓபன் டாக்
ADDED : 645 days ago
தமிழ் திரையுலகில் மிக இளம் வயதிலேயே கவர்ச்சி நடிகையாக புகழ் பெற்ற யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக பிரபலமானார். தமிழக இளைஞர்கள் பலரும் யாஷிகாவின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‛‛13 வயதிலேயே தனக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக கூறியுள்ளார்.
சந்தானம் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான இனிமே இப்படித்தான் படத்தின் ஷூட்டிங்கிற்காக புதுச்சேரி சென்ற போது அங்கே ஒருவன் யாஷிகாவிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும், அப்போதே அதை தைரியமாக கையாண்டு தன்னை சீண்டிய நபரை எட்டி உதைத்ததாகவும் பெண்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் தைரியம் மிகவும் முக்கியம் என்றும் அந்த பேட்டியில் யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.