ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' படத்திற்கு யுஏ சான்றிதழ்!
ADDED : 647 days ago
புதுமுக இயக்குனர் நிகேஷ் என்பவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள படம் ரிபெல். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். மூணாறு பகுதியிலுள்ள மக்களின் அரசியல் குறித்து பேசப்போகும் இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், கடந்த வாரத்தில் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பி வைத்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது ரிபெல் படத்துக்கு சென்சார் போர்ட் யுஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. அது குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.