உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதலரை கைப்பிடிக்கும் சம்யுக்தா?

காதலரை கைப்பிடிக்கும் சம்யுக்தா?

தமிழில் களரி என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை சம்யுக்தா. அதன் பிறகு தீவண்டி என்ற படத்தில் நடித்தவர், தனுஷ் நடித்த வாத்தி படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமானார். அதையடுத்து அவருக்கு தமிழில் புதிய படங்கள் கமிட்டாகாத நிலையில், மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சில வருடங்களாக தனது பாய் பிரண்டை காதலித்து வரும் சம்யுக்தா, விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இந்த ஆண்டே அவரது திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. என்றாலும், இதுகுறித்து சம்யுக்தா தரப்பிலிருந்து இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !