ராம்சரண் படத்தில் இணைந்த சிவராஜ்குமார்
ADDED : 721 days ago
ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வரும் தெலுங்கு நடிகர் ராம்சரண், அடுத்தபடியாக புச்சி பாபு இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தற்போது கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் இப்படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இந்த தகவலை தான் அளித்த ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினியின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து தமிழிலும் பிரபலமாகி வரும் சிவராஜ்குமார், தற்போது தெலுங்கிலும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.