நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் சிவராஜ் குமார்!
ADDED : 695 days ago
கன்னட நடிகர் சிவராஜ் குமார் கன்னட சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். ஏற்கனவே தமிழில் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
தற்போது கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவராஜ் குமார் நடித்துள்ளார். இந்த நிலையில் நேரடி தமிழ் படம் ஒன்றில் சிவராஜ் குமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தகவலின் படி, இயக்குனர் வடிவேல் இயக்கத்தில் புதிய தமிழ் படம் ஒன்றில் சிவராஜ் குமார் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள். இதனை ராட்சன், பேச்சுலர் போன்ற படங்களை தயாரித்த ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.