ரெய்டு 2ம் பாகத்தின் பூஜை விழாவில் கலந்து கொண்ட ரவி தேஜா!
ADDED : 637 days ago
கடந்த 2018ல் ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவ்கன், இலியானா நடித்து ஹிந்தியில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் 'ரெய்டு'. இப்படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவ்கன் 'ரெய்டு 2' படத்தில் நடிக்கிறார். நேற்று பூஜை விழா உடன் இதனை அறிவித்தனர். இதில் ரவி தேஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வரும் நவம்பர் 15ம் தேதி படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.