பிப்.,2ம் தேதி திரைக்கு வரும் வடக்குப்பட்டி ராமசாமி!
ADDED : 718 days ago
டிக்கிலோனா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. சான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தை பீபுல் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்த இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி வெளியாகிறது என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.