பான் இந்தியா படத்திற்காக ஹிந்தி நடிகருடன் இணையும் தனுஷ்
ADDED : 635 days ago
நடிகர் தனுஷ் தமிழ் மொழி படங்களைக் கடந்து தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் தமிழ், தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் மற்றும் ஹிந்தியில் ஆனந்த்.எல்.ராய் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் புதிய பான் இந்திய படம் ஒன்றில் பிரபல ஹிந்தி நடிகர் ஜிம் சர்ப் உடன் இணைந்து தனுஷ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜிம் சர்ப் ஏற்கனவே சஞ்சு, பத்மவாத், கங்குபாய் போன்ற பிரபலமான ஹிந்தி படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.