உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோட் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ

கோட் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். சுருக்கமாக தி கோட் என அழைக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் நடைபெற்றது. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு நிறைவு பெறும் என கூறப்படுகிறது. இப்படம் வரும் ஜூன் 13ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !