விஜய்யின் ‛தி கோட்' படத்தின் ஓடிடி விற்பனை 125 கோடியா?
ADDED : 679 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‛தி கோட்' (தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் என பல இடங்களில் நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் ஓடிடி வியாபாரம் தற்போது நடைபெற்று வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளுக்கான ஓடிடி ரைட்ஸை ரூ.125 கோடிக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு இப்படம் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது.