ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறாரா ஹரிப்பிரியா!
ADDED : 631 days ago
எதிர்நீச்சல் தொடரில் நந்தினி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார் ஹரிப்பிரியா. இவரது கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனதை தொடர்ந்து இவரது திறமையான நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். சிலர் ஹரிப்பிரியாவை படத்தில் நடிக்க சொல்லியும் கேட்டு வந்தனர். இந்நிலையில், ஹரிப்பிரியா தனது இன்ஸ்டாகிராமில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ஹரிப்பிரியா திரைப்படத்தில் நடிக்கிறாரா? என ரசிகர்கள் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். ஹரிப்பிரியா தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் கூட என்பதால் ஏ.ஆர்.முருகதாஸை டிவி நிகழ்ச்சிக்காக பேட்டி எடுத்திருக்கலாம் என்றும் சொல்லி வருகின்றனர்.