விஜய் சேதுபதியின் பிறந்தநாளில் வெளியான மகாராஜா படத்தின் போஸ்டர்
ADDED : 631 days ago
விஜய் சேதுபதி ஹிந்தியில் நடித்த மேரி கிறிஸ்துமஸ் படம் பொங்கலுக்கு திரைக்கு வந்துள்ளது. ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள இந்த படத்தில் கைத்ரினா கைப் நாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் இன்று விஜயசேதுபதியின் பிறந்த நாள் என்பதால் தற்போது அவர் நடித்து வரும் ஐம்பதாவது படமான மகாராஜா படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், கையில் கத்தியுடன் ரத்த கரைபடிந்த உடம்புடன் நின்று கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. நிதிலன் சாமிநாதன் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க, அஜனீஸ் லோக்நாத் என்பவர் இசையமைக்கிறார்.