சினிமா இசை கலைஞர்கள் உருவாக்கிய 'அயோத்தி கீதம்'
ADDED : 625 days ago
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாக்கள் தொடங்கி உள்ள நிலையில் சினிமா இசை கலைஞர்கள் இணைந்து அயோத்தி கீதம்(ஆன்தம்) ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனை ஓ மை காட் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வி.நாகராஜ் இயக்கி உள்ளார். தர்புகா சிவா இசை அமைத்துள்ளார். சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர். அலோக் ரஞ்சன் (ஹிந்தி), பிரமோத் மறவந்தே (கன்னடம்) மதன் கார்க்கி (தமிழ்), சரஸ்வதிபுத்திர ராமஜோகய்யா சாஸ்திரி (தெலுங்கு) ஆகியோர் எழுதி உள்ளனர். புகழ்பெற்ற பின்னணி பாடகர்களான விஜய் பிரகாஷ், எஸ்.பி.சரண், ஹரிசரண், ஸ்ரீநிவாஸ், தர்புகா சிவா, சத்யபிரகாஷ், குஷ் அகர்வால், பவித்ரா சாரி, ரக்ஷிதா சுரேஷ், மாளவிகா ராஜேஷ் ஆகியோர் பாடி உள்ளனர்.