உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பார்த்திபனின் புதிய படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது!

பார்த்திபனின் புதிய படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது!

இரவின் நிழல் படத்தை அடுத்து தனது புதிய படத்திற்கு டி. இமான் இசையமைப்பதாகவும், அவரது இசையில் ஸ்ரேயா கோசல், ஸ்ருதிஹாசன், அறிவு உள்ளிட்டோர் பாடல் பாடி இருப்பதாகவும் ஏற்கனவே தெரிவித்திருந்தார் பார்த்திபன். குழந்தைகளை மையப்படுத்திய என் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை குழந்தை பருவத்திலிருந்து இசையின் விசையை அசைத்து பார்க்கும் லிடியன் நாதஸ்வரம் வெளியிடுகிறார் என்று தெரிவித்து இருந்தார் பார்த்திபன். இந்நிலையில் இன்று அந்த படத்தின் டைட்டிலை வீடியோ உடன் வெளியிட்டுள்ளார். படத்திற்கு ‛டீன்ஸ்' என பெயரிட்டுள்ளார். குழந்தைகள் மையமாக வைத்து திரில்லிங் அட்வென்சர் படமாக இதை உருவாக்குகிறார் பார்த்திபன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !